பொழுதுபோக்கு
திருமண நாளில் கர்ப்பத்தை அறிவித்த சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துகள்!

திருமண நாளில் கர்ப்பத்தை அறிவித்த சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துகள்!
ஜீ-தமிழில் ஒளிபரப்பான “நீ தானே பொன்வசந்தம்” என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை தர்ஷனா தனது திருமண நாளில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அவருடைய கணவரோடு எடுத்த கர்ப்ப கால புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து உள்ளார் தர்ஷனா. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.தர்ஷனா மருத்துவராக இருந்தாலும் ஜீ தமிழில் நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளியான “நீ தானே பொன்வசந்தம்” என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். முதல் சீரியலிலே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான “கனா” சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில்தான், இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கனா சீரியல் இருந்து விலகிவிட்டார். முதல் சீரியலில் தன்னைவிட வயது அதிகமான கதாநாயகனை காதலித்து திருமணம் செய்வது போன்று இவருடைய கதாபாத்திரம் இருந்தது. தொடர்ந்து 2-வது சீரியலான கனாவில் விளையாட்டு வீராங்கனையாக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்கள் மற்றும் அவருடைய சாதனைகள் போன்றவற்றை மையப்படுத்தியே கதை நகர்ந்தது. அவரது கேரக்டர் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றிருந்தது.மருத்துவரான நடிகை தர்ஷனா அவருடைய உறவினரான அபிஷேக் என்பவரை திருமணம் செய்திருந்தார். இருவரும் பல் மருத்துவர்கள். இருவரும் காலேஜ் படிக்கும்போது இருந்தே சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்தின் போது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு சீரியலை விட்டு விலகி இருக்கும் தர்ஷனா தற்போது கர்ப்பமாக உள்ளார். நேற்று அவருடைய திருமண நாள். தான் கர்ப்பமாக இருப்பதை போட்டோ சூட் மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து உள்ளார் தர்ஷனா. முதலில் குடும்பத்தினருக்கு தர்ஷனா நடிப்பது பிடிக்கவில்லை என்றாலும் நீதானே என் பொன்வசந்தம் சீரியல் மூலமாக இவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து குடும்பத்தினரும் சப்போர்ட் செய்ய தொடங்கி இருக்கின்றார்கள். இந்த நிலையில் இப்போது தர்ஷனா மற்றும் அவருடைய கணவர் அபிஷேக் இருவரும் கர்ப்ப கால போட்டோ சூட் எடுத்து இருக்கிறார்கள். அதை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.