இலங்கை
துணவி சிவன் ஆலயத்தின் சீரமைப்பு ஜூனில் முழுமை!

துணவி சிவன் ஆலயத்தின் சீரமைப்பு ஜூனில் முழுமை!
400 ஆண்டுகால பழமைவாய்ந்த துணவி சிவன் கோவிலின் சீரமைப்புப் பணிகள், ஜூன் மாதம் முழுமைபெறும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் துறைசார் அதிகாரிகள் தெரிவித்ததாவது:
2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கர்பக்கிரகம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியன, தொல்லியல் ஆய்வியல் முறைப்படி சீரமைக்கப்பட்டு வருகின்றது. பணிகள் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. ஜூன் மாதமளவில் ஆலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் முழுமைபெறும் – என்றனர்.