சினிமா
விளக்கு பிடிச்சாங்களா? சத்யராஜ் மகளை கண்டபடி விளாசிய ஒய்ஜி மகேந்திரன் மகள்..
விளக்கு பிடிச்சாங்களா? சத்யராஜ் மகளை கண்டபடி விளாசிய ஒய்ஜி மகேந்திரன் மகள்..
நடிகர் சத்யராஜ் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கடந்த ஆண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து திமுக கட்சியில் இணைந்தார். அதன்பின் பல கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு திவ்யா சத்யராஜ் பேசி வருகிறார்.சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற அந்த தருணம் மிகவும் சவாலான தருணம். அந்நேரத்தில் கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது. நான் உயிரோடு இருப்பேனா? நீங்கள் உயிரோடு இருப்பீர்களா? என்பது யாருக்குமே தெரியவில்லை. அந்நேரத்தில் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகி கொரோனாவை கட்டுப்படுத்தினார்கள். அந்நேரத்தில் அனைவரும் ஜாலியாக பால்கனியில் நின்றுக்கொண்டு விளக்கு பிடிக்கலாம், கைத்தட்டலாம் என்று பேசியிருந்தார்.இதை கேள்விப்பட்ட ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி, விளக்கு பிடிச்சாங்க என்று அவர் பேசியது சரியான வார்த்தை கிடையாது. அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று நீங்களே உங்கள் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேடையில் என்னென்ன பேச வேண்டும் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கிறது. அது உங்களுக்கு ஏன் தெரியவில்லை என்று எனக்கு தெரியவில்லை.பிஜேபி காரர்கள் விளக்கை பிடிக்க சொல்லவில்லை, விளக்காஇ ஏற்றச்சொன்னார்கள். சத்தங்களை போடச் சொன்னார்கள். அது மனசுக்குள் ஒரு பாசிடிவிட்டியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அப்படி அவர்கள் செய்யச் சொன்னார்கள். ஆனால் பிஜேபி அதை மட்டும் செய்துவிட்டுவிடவில்லை. கொரானா நேரத்தில் நரேந்திர மோடி அவர்கள் மட்டும் பிரதமராக இல்லை என்றால் என்ன அயிருக்கும் என்றூ என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதை திருத்திக்கொள்ளுங்கள், நீங்கள் மிகப்பெரிய நடிகர் தயராஜ் மகள் என்று சரமாரியாக பேசியிருக்கிறார் மதுவந்தி.