Connect with us

இலங்கை

21 ஆம் திகதிக்கு முன் ஈஸ்டர் தாக்குதல் குறித்து தெரியவரும்

Published

on

Loading

21 ஆம் திகதிக்கு முன் ஈஸ்டர் தாக்குதல் குறித்து தெரியவரும்

   இலங்கையில் கடந்த 20219 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் பொறுப்பான பலர் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் வெளிப்படுவார்கள் என கூறினார்.

Advertisement

அதோடு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

 பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் துறை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இதற்குப் பொறுப்பான ஒரு குறிப்பிடத்தக்க குழுவை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது.

Advertisement

மார்ச் 30 அன்று மாத்தறையின் தெய்யந்தர பகுதியில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, இதனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்   கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிரில் காமினி,  ஏப்ரல் 21 ஆம் திகதிக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் அறிக்கையில் வலுவான நம்பிக்கை இருப்பதாகவும் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னதாக, புதிய அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நீதி வழங்கும் என்று தெரியவில்லை என்றும், அப்படியானால், புதிய அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் என்றும் பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் கூறியிருந்தார்.

Advertisement

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த மூளையாக செயல்பட்டவர் வேறு யாருமல்ல, சஹரான் ஹாஷிம் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் FBI சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன