இலங்கை
ஈஸ்டர் ஞாயிறு பாதுகாப்பு குறித்து முப்படை தளபதிகளுக்கு ஆலோசனை

ஈஸ்டர் ஞாயிறு பாதுகாப்பு குறித்து முப்படை தளபதிகளுக்கு ஆலோசனை
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா முப்படைத் தளபதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் ஒருங்கிணைந்து நாட்டில் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை 2025.04.18 மற்றும் 2025.04.20 ஆகிய திகதிகளில் நடைபெறுவதால், அந்த நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.