இலங்கை
தேயிலை சக்தி நிதியின் பங்குகள் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்க தீர்மானம்!..

தேயிலை சக்தி நிதியின் பங்குகள் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்க தீர்மானம்!..
தேயிலை சக்தி நிதியின் பங்குகளை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் பங்குகளுக்கான பணத்தையும் வட்டியையும் பெற்றுக் கொள்ள முடியும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
தேயிலை சக்தி நிதியின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது எனும் நிலைப்பாட்டிலேயே தாம் உள்ளதாக அவர் கூறினார்.
இதனால் தேயிலை சக்தி நிதியின் பங்குகளை கொள்வனவு செய்து நிதியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு அவற்றை உரிய வட்டியுடன் மீண்டும் வழங்க தீர்மானித்ததாக தெரிவித்தார். (ப)