Connect with us

பொழுதுபோக்கு

நீண்ட நாள் காதலருடன் திருமணம்: நடிகை அபிநயா போட்டோஸ் வைரல்

Published

on

Abhinaya Wedding

Loading

நீண்ட நாள் காதலருடன் திருமணம்: நடிகை அபிநயா போட்டோஸ் வைரல்

2008-ம் ஆண்டு தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான நின்னந்தே என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அபிநயா, அடுத்து நாகர்ஜூனாவின் கிங் படத்தில் நடித்திருந்தார்.2009-ம் ஆண்டு தமிழில் வெளியான நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவர், ஈசன், வீரம், பூஜை, குற்றம் 23 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழி படங்களில் நடித்துள்ள அபிநயா, கடைசியாக மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு மனைவியாக நடித்திருந்தார்.தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வரும் அபிநயா, கடந்த மார்ச் மாதம், தனது நீண்டநாள் காதலர் வெகசனா கார்த்திக் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.ஏப்ரல் 16-ந் தேதி (நேற்று) இவர்களின் திருமணம் நடைபெற்றது. தற்போது திருமண புகைப்படங்களை அபிநயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன