விளையாட்டு
பார்டர் – கவாஸ்கர் டிராபி தோல்வி: இந்திய அணியின் 2 கோச்-களுக்கு பி.சி.சி.ஐ கல்தா

பார்டர் – கவாஸ்கர் டிராபி தோல்வி: இந்திய அணியின் 2 கோச்-களுக்கு பி.சி.சி.ஐ கல்தா
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான தொடக்கப் போட்டி வருகிற ஜூன் 20 முதல் ஹெடிங்லி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ அதன் பயிற்சியாளர்களில் இருவரை அதிரடியாக நீக்கியுள்ளது.ஆங்கிலத்தில் படிக்கவும்: Ahead of England tour, BCCI removes Abhishek Nayar, T Dilip as coaches of Indian teamஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்த நிலையில், அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோரை உடனடியாக நீக்கியுள்ளது பி.சி.சி.ஐ. இந்த இருவருடன், ஸ்ட்ரென்த் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் என்பவரையும் நீக்கியிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில், அபிஷேக் நாயர் கடந்த ஆண்டு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் துணை பயிற்சியாளராக அணியில் சேர்ந்தார். ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இந்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டதிலிருந்து டி. திலீப் அணியில் இருந்து வந்தார். ஸ்ட்ரென்த் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய்க்குப் பதிலாக, இந்திய அணியுடன் இரண்டாவது முறையாகப் பணியாற்ற உள்ள அட்ரியன் லு ரூக்ஸை பி.சி.சி.ஐ நியமித்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர் ஜான் ரைட் 2000-களின் முற்பகுதியில் இந்திய அணி பயிற்சியாளராக இருந்தபோது, அட்ரியன் லு ரூக்ஸ் ஸ்ட்ரென்த் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக இருந்தார், பின்னர் அவர் தென் ஆப்பிரிக்க ஆடவர் அணியில் சேர்ந்தார். அதன் பின்னர் அவர் ஐ.பி.எல் தொடருக்கான அணிகளில் பணியாற்றி வருகிறார், முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2008-2019) அணியாகவும், இப்போது பஞ்சாப் கிங்ஸ் பணியாற்றி வருகிறார். இந்த மூன்று போரையும் இந்திய அணியில் நீக்கப்பட்டது குறித்து பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் பேசுகையில், “நாயர், திலீப் மற்றும் சோஹம் ஆகியோருக்கு கடந்த வாரம் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வாரியத்திற்கு இப்போது புதிய நியமனம் எதுவும் இருக்காது” என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரின் படுதோல்விக்குப் பிறகு, பிசிசிஐ அதன் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோட்டக்கை நியமித்தது, திலீப் தனது ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவியை உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட்டுடன் சேர்த்து பகிர்ந்து கொண்டார். உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் இந்திய அணியில் இணைவதற்கு முன்பு அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். தற்போதைய வீரர்கள் அவரை மிகவும் உயர்வாக மதிப்பிட்டனர். கொல்கத்தாவுக்கு கம்பீர் ஆலோசராக செய்யப்பட்டு வந்த நிலையில், தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அபிஷேக் நாயரை அணிக்குள் கொண்டு வந்தார். கொல்கத்தா அணியில் இருந்து போது, அபிஷேக் நாயர் இளம் வீரர்களை ஊக்குவித்தற்கு அதிகம் அறியப்பட்டார். இந்திய அணியுடனான அவரது ஒப்பந்தம் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை இருக்கும் நிலையில், அவரை நீக்கம் செய்ய பி.சி.சி.ஐ ஏன் முடிவு செய்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.திலீப்பைப் பொறுத்தவரை, பி.சி.சி.ஐ ஒரு வருடம் மட்டுமே நீட்டிப்பு வழங்கியது. டி-20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளின் போது அவர் களத்தில் சிறப்பாக ஃபீல்டிங் செய்த வீரர்களுக்கு பதக்கம் வழங்கி கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.