சினிமா
பெண்ணாக இருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன்.. பிரபல நடிகரின் பேச்சால் பரபரப்பு

பெண்ணாக இருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன்.. பிரபல நடிகரின் பேச்சால் பரபரப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.இவர் நடிப்பில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் சமீபத்தில் கமல் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், ” கமல்ஹாசன் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் பெண்ணாக பிறந்திருந்தால் நிச்சயம் அவரை தான் திருமணம் செய்து இருப்பேன்” என கூறியுள்ளார். தற்போது சிவராஜ் குமார் பேசிய இந்த விஷயம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.