Connect with us

இந்தியா

வக்ஃப் சட்டத்திற்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு பதில் அளிக்க 7 நாட்கள் அவகாசம்

Published

on

Vaqp

Loading

வக்ஃப் சட்டத்திற்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு பதில் அளிக்க 7 நாட்கள் அவகாசம்

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனுக்கள் குறித்து 7 நாட்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதா பெரும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இந்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள், முஸ்லீம் அமைப்புகள் என பலரும்உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்த மனுக்கள் மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 7 நாட்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது,தொடர்ந்து மத்திய அரசு மனுதாரர்களுக்கு அளிக்கும் பதிலை மறுபரிசீலனை செய்ய 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான நீதிமன்ற அமர்வு, மத்திய அரசின் பதிலை மனுதாரர்கள் மதிப்பாய்வு செய்தவுடன் இந்த சட்டம் தொடர்பான இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற விசாரணையில், மனுதாரர்கள் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வக்பு சட்டத்தில் உள்ள திருத்தங்கள் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 26 க்கு எதிரானது என்று கூறினார். மேலும் விசாரணையின் போது, நீதிமன்றங்களால் வக்பு என்று அறிவிக்கப்பட்ட சொத்துக்களை ரத்து செய்யும் அதிகாரம், மத்திய வக்பு கவுன்சில்கள் மற்றும் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட சட்டத்தின் சில முக்கிய விதிகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறினார்.வக்பு சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 10 மனுக்கள் பட்டியலிடப்பட்டன. ஏ.ஐ.எம்.ஐ.எம். (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஏ.ஏ.பி தலைவர் அமானத்துல்லா கான், சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம், அர்ஷத் மதானி, சமஸ்தா கேரள ஜமியத்துல் உலேமா, அஞ்சும் கதாரி, தைய்யாப் கான் சல்மானி, முகமது ஷாஃபி, முகமது ஃபஸ்லுர்ரஹிம் மற்றும் ஆா.ஜே.டி தலைவர் மனோஜ் குமார் ஜா ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர். டி.எம்.சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் ஜியா-உர்-ரஹ்மான் பர்க் ஆகியோரும் புதிய மனுக்களை தாக்கல் செய்தனர்.இதனிடையே இந்த வக்பு வாரிய சட்டம் குறித்த விசாரணையின்போது பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்கூர், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு சிலர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. சில தலைவர்கள், ஒத்துழைப்புடன், மால்கள் கட்ட கல்லறை நிலங்களை கூட விற்றனர். மற்றவர்கள் வெறும் ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு 5 நட்சத்திர ஹோட்டல் கட்ட அனுமதித்தனர்.’வக்பு’ என்ற பெயரில் நடந்து வந்த இந்த வெளிப்படையான கொள்ளை இப்போது நிறுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த நிலங்களின் நன்மைகள் இப்போது முஸ்லிம் பெண்கள், விதவைகள், பெண்கள், குழந்தைகள், கல்வி மையங்கள், சுகாதார மையங்கள் மற்றும் அவர்களின் உதவி வடிவில் செல்லும். இது எங்கள் உறுதிமொழி, அதை நாங்கள் நிறைவேற்றுவோம், ”என்று கூறியுள்ளார்.வக்பு சட்டத்திற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, மனுதாரர் தயா சிங், கூறுகையில’, வக்ஃப் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பொதுவான பிரதிநிதித்துவத்தை வழங்க அரசாங்கம் விரும்பினால், அவர்கள் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு மற்றும் டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் அடிப்படையில் சட்டத்தை இயற்றியிருக்க வேண்டும். இருப்பினும், அவர்கள் வக்பு சட்டத்தால் இந்துக்களை துருவப்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்களின் துருவப்படுத்தல் முயற்சியை நிறுத்த நாங்கள் முன்வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன