சினிமா
விஜே பிரியங்கா திருமணத்திற்கு வராத மாகாபா ஆனந்த்!! கேள்வி கேட்கும் ரசிகர்கள்..

விஜே பிரியங்கா திருமணத்திற்கு வராத மாகாபா ஆனந்த்!! கேள்வி கேட்கும் ரசிகர்கள்..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே இருவரும் தங்களின் காமெடி கலந்த ஸ்டைலில் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.இந்நிலையில், விஜே பிரியங்கா, டிஜே வசி என்பவரை திடீரென நேற்று ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தாலும், சிலர் ஏன் திடீர் திருமணம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் பிரியங்கா – வசி திருமணத்திற்கு, விஜய் டிவி பிரபலங்கள், அமீர், பாவ்னி ரெட்டி, நிரூப், அன்ஷிதா, மதுமிதா, சுனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆனால் விஜே பிரியங்காவுடன் நெருக்கமாகவும் அவருடன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபா ஆனந்த் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.ஏன் நெருங்கிய தோழி பிரியங்கா திருமணத்திற்கு செல்லவில்லை என்று மாகாபா ஆனந்த், பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பதிவுகளில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.மேலும் விஜே பிரியங்கா பகிர்ந்து இன்ஸ்டாகிராம் பதிவிலும் மாகாபா அனந்த் வாழ்த்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.