இலங்கை
இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள், தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
ஏமனில் ஹவுத்தி பயங்கரவாத அமைப்பால் ஏவப்பட்ட பல ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் செயலிழக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (19) முதல் 26 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இது தொடர்பாக இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.