இலங்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கோட்டபாயவால் விரட்டப்பட்டவர் அனுரவிற்கு கடிதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; கோட்டபாயவால் விரட்டப்பட்டவர் அனுரவிற்கு கடிதம்!
இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர, 2019 இல் தான் இடமாற்றப்பட்டமை குறித்தும், உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் குறித்த தனது ஆராய்ச்சிகளிற்கு தடுக்கப்பட்டமை குறித்தும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்
2019 இல் விவரிக்கப்படாத இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019 ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சிலிருந்து காரணம் தெரிவிக்கப்படாமல் உடனடியாக தான் இடமாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் என்ற அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முக்கியமான ஆய்வொன்றில் ஈடுபட்டிருந்தவேளை தான் இடமாற்றப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
எனது இடமாற்றம் திட்டமிட்ப்பட்ட ஆனால் முன்னெடுக்கப்படாத விதம் அரசியல் தலையீடுகள் குறித்தும்நிறுவன சமரசம் குறித்தும் தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றது என தெரிவித்துள்ள அவர், என்னை ஜேர்மனியின் பேர்ளினின் துணை தூதரகத்திற்கு நியமிப்பதாக தெரிவித்திருந்தார்கள் ஆனால் அதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள உண்மைகள் அதிகாரத்துவ குழப்பம் மற்றும் அரசியல் நோக்கம் காரணமாக புதைந்து போகக்கூடாதுஎன தெரிவித்துள்ள அசங்க அபயகுணசேகர தனது திடீர் இடமாற்றம் குறித்து நீதி நிலைநாட்டப்ட்டால் நான் எனது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் நேர்மையுடன் பணியாற்ற தயாராகயுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தியோகபூர்வ வேண்டுகோள் விடுக்கப்பட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.