இலங்கை
குளத்தில் நீராடியவர் நீரில் மூழ்கி இறப்பு!

குளத்தில் நீராடியவர் நீரில் மூழ்கி இறப்பு!
வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளமொன்றில் நீராடிய இளைஞர், குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் சிட்டிவேரம் கண்ணகை அம்மன் கோவில் பகுதியில் உள்ள திம்புருவில் குளத்தில் நீராடியுள்ளனர்.
அப்போது மேற்படி இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர், வரணி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த வருடப்பிறப்புக் கொண்டாட்டத்தில் பொலிஸார் சிலரும் இளைஞர்களுடன் இணைந்திருந்தனர். அவர்களும் இணைந்தே இளைஞர்களுடன் குளத்தில் நீராடினார்கள் என்று சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்தனர். சடலம் மரண விசாரணைக்காகவும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.