Connect with us

டி.வி

சீரியல் சர்ச்சை..! 75 வயது நடிகருடன் திருமணம்..! விளக்கமளித்த நடிகை…

Published

on

Loading

சீரியல் சர்ச்சை..! 75 வயது நடிகருடன் திருமணம்..! விளக்கமளித்த நடிகை…

கலைஞர் டிவியில் விரைவில் வெளிவர இருக்கும் “மீனாட்சி சுந்தரம்” என்ற சீரியலில், எஸ்வி சேகரை 30 வயதுக்கு குறைவான இளம் பெண்ணை திருமணம் செய்யும் கதை வடிவில் காட்டப்பட்ட ப்ரோமோவைப் பார்த்து பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இதில் எஸ்வி சேகருடன் திருமணம் செய்யும் பெண் ரோலில் நடிகை ஷோபனா நடிக்க ஒப்புக்கொண்டதைப் பார்த்து அவரது ரசிகர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளனர்.இந்த சர்ச்சைக்கு நடிகை ஷோபனா பதில் அளித்து “இது ஒரு சர்ச்சையான கதை தான், ஆனால் நான் இந்த கதையில் என் நடிப்பை வெளிப்படுத்த என்னுடைய ஆர்வத்தை முன்னிட்டு ஒப்புக்கொண்டேன். நான் ஒரே விதமான ரோலில் மட்டுமே நடிக்க வேண்டும் என நினைத்திருக்கவில்லை, பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்” என்று கூறினார்.மேலும் “நடிப்புக்கு எதிராக சில பேர் நெகட்டிவாக பேசுவார்கள். அப்படி நெகடிவ் கருத்துகள் வந்தாலும் அதை வாங்கிக் கொள்ளலாம். அது தவறல்ல” என்று அவர் கூறினார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு தனது நண்பர்கள் கூட இது குறித்து ஷாக் ஆனதாக கூறியுள்ள ஷோபனா “இந்த ப்ரோமோவை பார்த்த பிறகு எனது நண்பர்களும் எனது நடிப்பை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். நான் இதை அனுபவித்து, அதற்கேற்றாக நடிக்க விரும்புகிறேன்” என்று தெளிவான பதிலினைக் கொடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன