இந்தியா
பவன் கல்யாண் மீது கேளவியெழுப்பிய முன்னாள் அமைச்சர்!

பவன் கல்யாண் மீது கேளவியெழுப்பிய முன்னாள் அமைச்சர்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் 100க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்து விட்டதாக முன்னாள் திருப்பதி தேவஸ்தான ஆங்காவல குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி குற்றம்சாட்டி இருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்த நிலையில் கோசாலையில் பசுக்கள் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ரோஜா கருத்துத் தெரிவிக்கையில்;
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருப்பதியில் அநியாயங்கள், தவறான செயல்கள் நடக்கும் போது ஏன் வாய் திறக்கவில்லை எனவும், பவன் கல்யாண் திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தவறு செய்தவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பதவியும், சலுகையும் கொடுத்தால் அவர் வாயை மூடிக் கொண்டு இருப்பாரா? எனக் கேள்வி எழுப்பிய ரோஜா, கோசாலையில் பசுக்கள் ஏன் இறந்து விடுகிறது என அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், ஏழுமலையானுக்கு துரோகம் செய்தால் என்ன நடக்கும் என சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு தெரியும் எனவும், அவர்கள் அதை அனுபவித்து இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.