இலங்கை
போதைப்பொருளுடன் கைதான இளைஞர் ; அடுத்தடுத்து சிக்கிய பல ஆபத்தான பொருட்கள்

போதைப்பொருளுடன் கைதான இளைஞர் ; அடுத்தடுத்து சிக்கிய பல ஆபத்தான பொருட்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வழங்கிய தகவலைத் தொடர்ந்து, T56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும், ஒரு கூரிய ஆயுதத்தையும் அத்துருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர் கடந்த 12 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸாரால் 11 கிராமும்100 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேக நபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையின் போது தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.