பொழுதுபோக்கு
முதல் சிங்கிள் ரிலீஸ்; இசை வெளியீட்டு விழாவுக்கு தேதி ரெடி: ‘தக் லைப்’ அப்டேட்

முதல் சிங்கிள் ரிலீஸ்; இசை வெளியீட்டு விழாவுக்கு தேதி ரெடி: ‘தக் லைப்’ அப்டேட்
நீண்ட இடைவெளிக்கு பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா இணைந்து நடித்துள்ள தக் லைப் படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு ஜாம்பவான்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படம் இன்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்றாத நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் என்ற படத்தில் இணைந்துள்ளனர்.கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. ‘ஜிங்குச்சா’ என்ற இந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இது குறித்து வெளியான போஸ்டரில் கமல்ஹாசன், சிம்பு இருவரும் நடமாடுவது போன்று வெளியிடப்பட்டது.இதனிடையே தக் லைப் படம் வரும் ஜூன் 3-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே 16-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே இன்று நடைபெற்ற தக் லைப் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மணிரத்னம் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.