இலங்கை
யாழ் மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பு

யாழ் மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது தற்போதைய நாட்களில் எச்சரிக்கை மட்டத்துக்கு அதிகரித்து வருகின்றமையால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N.சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.
வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை பொது மக்கள் எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் வெப்பநிலையானது 34.2 பாகை செல்சியஸ்ஸாக பதிவாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.