சினிமா
யோகி பாபு என் கூட நடிச்சவன் தான்.. பிரபுசாலமனை திட்டுவேன்!! பிளாக் பாண்டி..

யோகி பாபு என் கூட நடிச்சவன் தான்.. பிரபுசாலமனை திட்டுவேன்!! பிளாக் பாண்டி..
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து பல படங்களில் சிறு ரோலில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் பிளாக் பாண்டி. சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இருந்த பிளாக் பாண்டி, இ எம் ஐ என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷனுக்காக, காமெடி நடிகர் மாதவனுடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டு சில விஷயங்களை பேசியுள்ளார்.அதில், யோகி பாபு என் கூடதான் நடிச்சவன் தான் என் கூட இருந்தவன் தான். ஒருமுறை சுந்தர் சி சார் ஒரு பார்ட்டியில் சூரியும், பாண்டியும் கவுண்டமணி செந்தில் போல், அவர்களது காம்பினேஷன் ரொம்பவே நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அதனால் அரண்மனை 3யில் எனக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்.ஆனால் வாய்ப்பு ஏதும் கொடுக்கவில்லை. வெற்றிமாறன் சார் உதவி இயக்குநராக இருக்கும் போதே அவரை தெரியும். அவர் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தில் சூரியும் நானும் தான் கமிட்டாகினோம்.அதனால் சந்தோஷமாக இருந்தேன். போட்டோஷுட் எல்லாம் எடுத்து, என் பாஸ்போர்ட் கிட்டத்தட்ட 6 மாதம் வெற்றிமாறன் ஆஃபில் தான் இருந்தது. பின் சூரி மட்டும் படத்தில் இருப்பது தெரியவந்தது.பின் இயக்குநர் வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் அவரிடம் சண்டைப்போட்டு வாய்ப்பு வாங்கினே. ஆனால் படத்தில் நான் நடித்த காட்சிகள் இல்லை. பாபா படத்தில் சிறு வயது ரஜினியாக நான் தான் நடித்தேன். சாட்டை படத்தில் நடித்தேன். அதற்கு அந்த படத்தை தயாரித்த பிரபு சாலமன் எனக்கு சம்பளமே கொடுக்கவில்லை.அவரை நான் திட்டத்தான் செய்வேன். ஒன்றுமே இல்லாதவனுக்கு நீங்கள் அப்படி செய்தீர்கள் என்றால்கூட பரவாயில்லை, நான் ஒரு இடத்துக்கு வந்துவிட்டேன், அப்படிப்பட எனக்கு எப்படி சம்பளம் தராமல் இருக்கலாம் என்று பிளாக் பாண்டி தெரிவித்துள்ளார்.