இலங்கை
வாகனத் திருத்தகம் தீயில் எரிந்து அழிவு

வாகனத் திருத்தகம் தீயில் எரிந்து அழிவு
பெருமளவு சொத்துக்கள் நாசம்
மன்னார் – முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனத் திருத்தகம் ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்துக் காரணமாக, அந்தக் கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
குறித்த திருத்தகத்துக்குள் சில மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன என்றும், அவையும் எரிந்து அழிந்துள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருகிலுள்ள ஆலயத்தில் புனித வியாழன் வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், வழிபாட்டில் கலந்துகொண்ட இளைஞர்கள் கடை பற்றியெரிவதை அவதானித்து அதைக்கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும், எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.
மின்னொழுக்குக் காரணமாக இந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.