இலங்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுனில் சேனநாயக்க காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுனில் சேனநாயக்க காலமானார்
ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் சேனநாயக்க காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் இன்று (18) மாலை காலமானார்.
ஹினிதும தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளராக நீண்ட காலம் பணியாற்றிய சுனில் சேனநாயக்க, முதலில் நெலுவ பிரதேச சபை உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.
திரு. சுனில் சேனநாயக்கவின் உடல் நெலுவவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு நெலுவ பொது மைதானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.