சினிமா

‘குட் பேட் அக்லி’ நடிகரை கைது செய்த பொலிஸார்..! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!

Published

on

‘குட் பேட் அக்லி’ நடிகரை கைது செய்த பொலிஸார்..! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!

சமீபகாலமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் பல சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், தற்போது மலையாள நடிகரான சைன் டாம் சாக்கோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.குட்பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருக்கும் சைன் டாம் சாக்கோ தற்போது போதைப்பொருள் பயன்படுத்தியதோடு, பல நடிகைகளிடம் தவறான முறையில் நடந்துகொண்டார் எனும் கடுமையான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து கருத்துக்கள் எழுந்துள்ளன.கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் முன்னதாக நடந்திருந்த வேறொரு வழக்கின் விசாரணைக்காக சென்றிருந்த பொலிஸார் அங்கு சைன் டாம் சாக்கோவை சந்தித்துள்ளனர். எனினும் அவரைக் கைது செய்ய முனைந்த போது, அவர் தப்பி ஓட முயற்சித்த காட்சி அங்கிருந்தவர்களையும் பொலிஸாரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் தற்பொழுது இந்த வழக்குகள் அனைத்தும் இடைக்காலத்தில் ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விசாரணைகள் தற்போது தீவிரமாக நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.சைன் டாம் சாக்கோவின் கைது தொடர்பாக மலையாள சினிமா மற்றும் தென்னிந்திய திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது. பல முன்னணி இயக்குநர்கள், நடிகைகள் தங்களது சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version