இலங்கை
சட்டவிரோத பொருட்களுடன் கைதான சந்தேக நபர் ; பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்

சட்டவிரோத பொருட்களுடன் கைதான சந்தேக நபர் ; பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
அநுராதபுரம் – ஸ்ராவஸ்திபுரம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஸ்ராவஸ்திபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவர் ஆவர்.
சந்தேக நபரிடமிருந்து 03 லீற்றர் 750 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் , 180 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.