Connect with us

இலங்கை

திருமணமாகி 9 நாட்களில் பலியான இளம் குடும்பஸ்தர் ; தமிழர் பகுதியில் நடந்த சோகம்

Published

on

Loading

திருமணமாகி 9 நாட்களில் பலியான இளம் குடும்பஸ்தர் ; தமிழர் பகுதியில் நடந்த சோகம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக நேற்று(18)  இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சந்திவெளியைச்சேர்ந்த 27 வயதான  இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த 9 தினங்களுக்கு முன்தான் குறித்த இளைஞன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த விபத்தில் சிக்கிய மற்றைய இளைஞனும் கை கால்களில் பலத்த காயத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

  குறித்த இளைஞன் சந்திவெளியில் நேற்றிரவு இடம்பெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்து கொள்வோருக்காக வெதுப்பகமொன்றில் உணவினைக் கொள்வனவு செய்ய வந்த போதே விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன