இலங்கை
மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்
சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ரோபோக்கள் 21 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அத்துடன் இந்த ரோபோக்கள் மனிதர்களுடன் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த மனித வடிவிலான ரோபோக்களை ட்ராய்டு வி.பி மற்றும் நியோடிக்ஸ் ரோபோடிக்ஸ் ஆகிய சீன நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
குறித்த ரோபோக்களுக்கு மரதன் போட்டியில் பங்குபற்றுவதற்கு முன்னதாக பல வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.