இலங்கை
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் ; அரசாங்கம் வெளியிட்ட தகவல்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் ; அரசாங்கம் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், விவசாயிகளுக்கு தேவையான உரமானியத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான காணி பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தை குறிப்பிடத்தக்கது.