இலங்கை
இண்டிகோ விமானத்தின் மீது மோதிய லொறி

இண்டிகோ விமானத்தின் மீது மோதிய லொறி
இந்தியாவின் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் மீது டெம்போ ரக லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் நடந்ததாகவும் ,சம்பவத்திற்கு விமான நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்தது.
லொறி சாரதியின் அலட்சியத்தால் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மீது வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.