சினிமா
குக் வித் கோமாளி அடுத்த சீசனில் பிக்பாஸ் 8 பிரபலம்..! யார் தெரியுமா..?

குக் வித் கோமாளி அடுத்த சீசனில் பிக்பாஸ் 8 பிரபலம்..! யார் தெரியுமா..?
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக இரண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன ஒன்று பிக்பாஸ் மற்றது குக் வித் கோமாளி. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் பிக்போஸ் சீசன் 8 இன் பிரபலம் பங்குபற்ற உள்ளார்.பிக்போஸ் சீசன் 8 இல் இறுதிவரை தனது சொந்த இயல்பில் இருந்து மாறாமல் மக்கள் மனதை வென்ற சவுந்தர்யா இந்த சீசனில் கலந்து கொள்ளவுள்ளார். ப்ரோமோ வீடியோவில் சுனிதா ,ராமர் ,புகழ் ,தீனா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.மேலும் நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் தாமு இருவரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். இவர்கள் அனைவரதும் கூட்டணி மிகவும் அருமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.