Connect with us

வணிகம்

ரூ. 10 கோடி அல்லது ரூ. 50 கோடி… இந்தியாவில் பொருளாதார சுதந்திரம் பெற எவ்வளவு பணம் தேவை?

Published

on

Financial freedom

Loading

ரூ. 10 கோடி அல்லது ரூ. 50 கோடி… இந்தியாவில் பொருளாதார சுதந்திரம் பெற எவ்வளவு பணம் தேவை?

‘என்னிடம் ரூ. 10 கோடி இருந்தால் லைஃப் செட்டில் ஆகி விடும்’ – இந்த வாக்கியத்தை நீங்கள் பல முறை கேட்டிருப்பீர்கள். அல்லது நீங்களே கூட இவ்வாறு கூறி இருப்பீர்கள். ஆனால், பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கு ரூ. 10 கோடி அல்லது ரூ. 50 கோடி போன்ற பெரிய தொகை உண்மையில் அவசியமா?இந்த விவாதம் பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. எதிர்காலத்திலும் இந்த விவாதம் தொடரும். அதாவது, நீங்கள் ஒரு வேலையில் இருந்து, சீக்கிரமாக ஓய்வு பெற்று, இன்றுள்ள அதே வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க விரும்பினால், எவ்வளவு சேமிக்க வேண்டும்? அல்லது நீங்கள் 50 வயதில் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் மற்றும் சராசரியாக 75 வயது வரை வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த 25 ஆண்டுகளுக்கு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?சேமிப்பு மட்டுமல்ல, புத்திசாலித்தனமான முதலீடும் முக்கியம்:இன்று நீங்கள் எதை சேமித்தாலும், அந்த பணத்தின் உண்மையான மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே வரும். இதற்கு மிகப்பெரிய காரணம் பணவீக்கம். கடந்த 20 ஆண்டுகளின் தரவுகளைப் பார்த்தால், இந்தியாவில் பணவீக்க விகிதம் சராசரியாக 5-6% ஆக உள்ளது. அதாவது இன்று ரூ.1 லட்சம் வாங்கும் திறன் 10 – 15 ஆண்டுகளுக்குப் பிறகு கணிசமாகக் குறையும்.அத்தகைய சூழ்நிலையில், குறைந்தபட்சம் பணவீக்கத்தை வெல்லக்கூடிய அல்லது அதற்கு சமமான வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு திட்டத்தில் உங்கள் சேமிப்பை முதலீடு செய்வது முக்கியம். நிலையான வைப்புத் தொகையாக இருந்தாலும், அரசு உத்தரவாதம் அளிக்கப்பட்ட திட்டங்களாக இருந்தாலும் அல்லது பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக இருந்தாலும்  6 – 7% வருமானம் பணவீக்கத்தால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் என்று எதிர்பார்க்கலாம்.உண்மையான பொருளாதார சுதந்திரத்திற்கு எவ்வளவு பணம் தேவை?தி ஃபைனான்சியல் மாலின் தலைமை நிர்வாக அதிகாரியான நீரஜ் சௌஹான் தனது பகுப்பாய்விலிருந்து இதற்கு பதில் அளித்துள்ளார்.”பொருளாதார சுதந்திரம் என்பது பெரிய அளவிலான பணம் வைத்திருப்பதை குறிப்பதாக பலரும் நினைக்கின்றனர். இதற்காக, ரூ. 10 கோடி, ரூ. 50 கோடி அல்லது அதற்கும் அதிகமாக வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், இதை நிறுத்தி உங்களுக்கு உண்மையில் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்களா?” என்று அவர் கேள்வி எழுப்பிகிறார்.பொருளாதார சுதந்திரம் குறித்த அளவீடுஉங்கள் பொருளாதார சுதந்திர எண் = உங்கள் ஆண்டு செலவுகள் × 25இந்த ஃபார்முலா 4 சதவீத விதியை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் மூலதனத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் அதில் 4% திரும்பப் பெறலாம். மேலும், இதில் பணம் இல்லாமலும் போகலாம்.உதாரணம்:உங்கள் மாதச் செலவு ரூ.1 லட்சமாக இருந்தால்ஆண்டு செலவுகள் = 12 லட்சம்பொருளாதார சுதந்திர எண் = ரூ. 12 லட்சம் × 25 = ரூ. 3 கோடிஅதாவது, நீங்கள் ரூ. 3 கோடி முதலீடுகளை நன்கு திட்டமிட்டு வைத்திருந்தால், ஒவ்வொரு வருடமும் ரூ.12 லட்சத்தை (மாதம் ரூ.1 லட்சம்) எடுக்கலாம். உங்கள் மூலதனம் பாதுகாப்பாக இருக்கும்.அப்படியிருக்க எதற்கு ரூ. 10 கோடி?பெரிய தொகையை விரும்புவது தவறில்லை. உங்கள் செலவுகள் அதிகமாக இருந்தால் அல்லது நீங்கள் ஆடம்பர வாழ்க்கை முறையை விரும்பினால், உங்கள் பொருளாதார சுதந்திர எண் ரூ.10 கோடி, ரூ.20 கோடி அல்லது ரூ.50 கோடியாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரின் தேவைகளும் வேறுபட்டவை. உங்கள் உண்மையான செலவுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, வெளியே காட்டிக் கொள்ளாமல் திட்டமிடுவது முக்கியம்.சுருக்கமாக:பொருளாதார சுதந்திரம் என்பது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல. அது ஒரு மன நிலை. நீங்கள் தொடர்ந்து வேலை செய்ய விரும்புகிறீர்களா அல்லது அதற்கான தேவை இல்லையா என்பதை பொறுத்தது.எனவே, உங்கள் செலவுகள், உங்கள் முன்னுரிமைகள் மற்றும் உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப பதிலளிக்கவும். உங்களுக்கு ரூ.10 கோடி தேவையில்லை, சரியான திட்டம் தான் வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன