விளையாட்டு
MI vs CSK LIVE Score Updates: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

MI vs CSK LIVE Score Updates: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு
IPL 2025, MI vs CSK Live Cricket Score Updates: 18-வது ஐ.பி.எல் தொடரில் 38-வது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.ஆங்கிலத்தில் படிக்க:இந்த சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி அணி 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வியை சந்தித்துள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி அடைந்த அந்த அணி கடைசி 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சரிவில் இருந்து மீண்டு வருகிறது. அதே போல, சென்னை அணி முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில், பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா அணிகளிடம் தோல்வி அடைந்தது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இதனால், சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக் கணக்கைத் தொடருமா என்ற எதிர்ப்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணி:பெவன் ஜேக்கப்ஸ், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), திலக் வர்மா, மிட்செல் சாண்ட்னர், நமன் திர், வில் ஜேக்ஸ், ரியான் ரிக்கெல்டன்,ட் தீபக் சாஹர், ஜஸ்பிரீத் பும்ரா சென்னை சூப்பர் கிக்ஸ் அணி:டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ஜமி ஒவெர்டான், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, சாம் கரன், எம்.எஸ். தோனி, கலீல் அஹமடு, மதீஷா பதிரானா, நூர் அஹமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.