Connect with us

விளையாட்டு

PBKS vs RCB LIVE Cricket Score: பஞ்சாப் அணியை பழிதீர்க்குமா பெங்களூரு? – ஆர்.சி.பி. பவுலிங் தேர்வு

Published

on

PBKS vs RCB LIVE Cricket Score

Loading

PBKS vs RCB LIVE Cricket Score: பஞ்சாப் அணியை பழிதீர்க்குமா பெங்களூரு? – ஆர்.சி.பி. பவுலிங் தேர்வு

பஞ்சாப் 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா, பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்வி (ராஜஸ்தான், ஜதராபாத் அணியிடம்) கண்டுள்ளது.பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடந்த முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது. மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்த ஆட்டத்தில் பெங்களூரூவை 95 ரன்னில் கட்டுப்படுத்திய பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. ஒருநாள் இடைவெளியில் இரு அணிகளும் மறுபடியும் மல்லுக்கட்டுகின்றன.பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (257 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (232), நேஹல் வதேரா, பிரம்சிம்ரன் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென்னும் நல்ல நிலையில் உள்ளனர்.பெங்களூரு 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வியை (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) சந்தித்துள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (249 ரன்), பில் சால்ட் (212), கேப்டன் ரஜத் படிதார் (209), டிம் டேவிட் வலுசேர்க்கின்றனர். ஜிதேஷ் ஷர்மா, லிவிங்ஸ்டன் நல்ல பங்களிப்பை அளித்தால் மிடில் வரிசை மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், குருணல் பாண்ட்யா, யாஷ் தயாள் மிரட்டக்கூடியவர்கள்.தங்களது சொந்த மைதானத்தில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி அதற்கு சூட்டோடு சூடாக பதிலடி கொடுக்க முயற்சி மேற்கொள்ளும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.இவ்விரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் பஞ்சாப்பும், 16-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் முல்லாப்பூரில் இதுவரை நடந்த 3 ஆட்டங்களிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும் எனலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன