டி.வி
அமீர் – பாவனி கலியாணத்தால் எழுந்த சர்ச்சை..!நடந்தது என்ன..?

அமீர் – பாவனி கலியாணத்தால் எழுந்த சர்ச்சை..!நடந்தது என்ன..?
விஜய் டீவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போது உருவான அமீர் மற்றும் பாவனியின் காதல் கதை சமீபத்தில் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்தத் திருமண விழா சினிமா மற்றும் திரைபிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.அந்த அழகான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் என அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்த மகிழ்ச்சியான திருமண நிகழ்ச்சியில் ஷைஜி மற்றும் அவரது குடும்பம் பங்கேற்கவில்லை என்பதைக் கவனித்த ரசிகர்கள், இதை மிகப்பெரிய விடயமாக எடுத்துக்கொண்டு சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பத் தொடங்கினார்கள்.இதற்கு பதிலளிக்கும் வகையில் ஷைஜியின் கணவர் தனது இன்ஸ்டாகிராம் Storyயில் வெளியிட்ட ஒரு மறைமுகமான பதிவு, ரசிகர்களிடம் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது. அமீர் மற்றும் ஷைஜி குடும்பத்தினருக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாகவே நெருக்கமான உறவு இருந்தது என்பது ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயமாகும்.அந்தவகையில் பல ரசிகர்களும் ஷைஜி குடும்பம் அமீரை திருமணத்திற்குப் பின் தவிர்த்துவிட்டதாகவும், முன்பு நெருக்கமாக இருந்த பாசமான உறவு தற்போது இல்லை எனவும் விமர்சனம் செய்யத் தொடங்யுள்ளனர்.