இந்தியா
‘உயிருடன் வீடு திரும்ப முடியாது’; கோர்ட்டிலேயே நீதிபதியை மிரட்டிய குற்றவாளி

‘உயிருடன் வீடு திரும்ப முடியாது’; கோர்ட்டிலேயே நீதிபதியை மிரட்டிய குற்றவாளி
டெல்லியில், காசோலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியும், அவரது வழக்கறிஞரும், பெண் நீதிபதியை நீதிமன்ற வளாகத்திலேயே மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Meet us outside, and we will see how you return home alive’: Convict threatens woman judge inside Delhi courtroom ” யார் நீ? எங்களை வெளியே சந்தித்தால், நீ எப்படி உயிருடன் வீடு திரும்புகிறாய் என்பதை நாங்கள் பார்க்கிறோம்?” என குற்றவாளி பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி டெல்லி துவாரகா நீதிமன்றத்தில் அரங்கேறியது.குறிப்பாக, “குற்றவாளி தன்னுடைய கரங்களில் ஏதோ ஒரு பொருளை வைத்திருந்தார். தீர்ப்பு வழங்கிய போது அதனை என் மீது வீச முயன்றார்” என்று சம்பந்தப்பட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.தனக்கு சாதகமான தீர்ப்பு வழங்காததால் குற்றவாளி கோபத்துடன் கத்தியதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியில் ஆபாசமான வார்த்தைகளால் தன்னுடைய தாயை குற்றவாளி திட்டியதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.”அவர்கள் இருவரும் (குற்றவாளி மற்றும் வழக்கறிஞர்) என்னை வேலையில் இருந்து ராஜினாமா செய்யுமாறு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார்கள். குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கும்படி என்னை மிரட்டினார்கள். இல்லையெனில் அவர்கள் என் மீது புகார் அளித்து, வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைப்போம் என்று கூறினர்” என நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்காக குற்றவாளிக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும், அவரது நடத்தைக்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக வழங்குமாறு வழக்கறிஞர் அதுல் குமாருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் 3 நாட்கள் கழித்து, ஏப்ரல் 5 ஆம் தேதி காசோலை வழக்கில் குற்றவாளிக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 6.65 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தண்டனை விதிக்கப்பட்ட நபர் 63 வயதான ஓய்வுபெற்ற அரசு ஆசிரியர் என்றும், அவருக்கு வேலையில்லாத மூன்று மகன்கள் இருப்பதாகவும் கூறி, தண்டனையை குறைக்குமாறு குற்றவாளியின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.இந்த வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை டெல்லி உயர்நீதிமன்றம் எடுக்கும் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.