Connect with us

பொழுதுபோக்கு

காதலரை கரம் பிடித்த ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா… திரைப் பிரபலங்கள் வாழ்த்து!

Published

on

Abiyana wedding

Loading

காதலரை கரம் பிடித்த ‘நாடோடிகள்’ நடிகை அபிநயா… திரைப் பிரபலங்கள் வாழ்த்து!

தமிழ் சினிமாவில் ‘நாடோடிகள்’ திரைப்படம் மூலமாக பிரபலம் அடைந்தவர் அபிநயா. கேட்கும், பேசும் திறன் சவால் கொண்டவரான இவர், தனது முதல் படத்திலேயே உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.இதன் தொடர்ச்சியாக, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, அண்மையில் இவர் மலையாளத்தில் நடித்த ‘பனி’ என்ற திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.சமீபத்தில் இவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், ஏறத்தாழ 15 ஆண்டுகளாக ஒரு நபரை தாம் காதலித்து வருவதாக கூறியிருந்தார். குறிப்பாக, அந்நபரை விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் அவர் கூறினார். இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அதன்படி, கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி தன்னுடைய காதலரான தொழிலதிபர் வகிசனா கார்த்திக் என்பவரை அபிநயா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.இந்நிலையில், இவர்களது திருமணத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட திரைத் துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். மேலும், பலரும் அவிநயா – வகிசனா கார்த்திக் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன