இந்தியா
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டம் – திரளான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பு

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டம் – திரளான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பு
புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சியினர் சார்பாக விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.அதன்படி, மகளிர் காங்கிரஸ் காலாப்பட்டு தொகுதி சார்பாக முன்னாள் அமைச்சர் M.O.H சாஜகான் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்திலிங்கம் , முன்னாள் துணை சபாநாயகர் எம் என் ஆர் பாலன், மாநில மகளிர் அணி தலைவி நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.விலைவாசி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்து பா.ஜ.க-விற்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. குறிப்பாக, விறகு அடுப்பில் சமைத்து போராட்டம் நடத்தப்பட்டது.இதில் மகளிர் காங்கிரஸின் மாநில நிர்வாகிகள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.