இலங்கை
தமிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி
அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் பெலிகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
கலேவெலயிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற உந்துருளியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்தில் 31 வயதுடைய ஆணொருவரும், 21 வயதுடைய பெண்ணொருவருமே உயிரிழந்தனர்.
உந்துருளியில் பயணித்த குழந்தையொன்று காயமடைந்துள்ளதாகவும், சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.