இந்தியா
நீண்ட நாள் உடல்நலக்குறைவு: போப் பிரான்சிஸ் மரணம் – கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகம்

நீண்ட நாள் உடல்நலக்குறைவு: போப் பிரான்சிஸ் மரணம் – கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகம்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் 5 வாரங்களுக்குமேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கியிருந்தார்.இந்நிலையில், இன்று காலை வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்து உள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் இன்று காலமானார். போர் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.தென் அமெரிக்காவிலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை போப் பிரான்சிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.பிரான்சிஸ் 1936-ம் ஆண்டு டிச.17-ம் தேதி பியூனஸ் அயர்ஸில் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ பிறந்தார். ரயில்வேயில் கணக்காளராக பணியாற்றிய மரியோ-ரெஜினா சிவோரி தம்பதியின் 5 குழந்தைகளில் இவரும் ஒருவராவார். வேதியியல் தொழில்நுட்ப வல்லுநராக பட்டம் பெற்ற பிறகு, அவர் கிறிஸ்துவை தொடர முடிவு செய்து மார்ச் 11, 1958-ல், அவர் இயேசு சங்கத்தின் புதுமைப்பித்தனில் சேர்ந்தார்.பதவியில் இருக்கும் போப் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்?பதவியில் இருக்கும் போப்பின் மரணம், ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்குள் ஆழ்ந்த துக்கம் மற்றும் மாற்றத்தின் காலத்தை தொடங்குகிறது. இது காலங்காலமாக மதிக்கப்படும் சடங்குகள் மற்றும் ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட செயல்முறையால் குறிக்கப்படுகிறது. முன்னதாக, புதிய போப் தொடர்பான முடிவை எடுக்க மருத்துவ ரீதியாக இயலாது என்றால் ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளதாக பிரான்சிஸ் கூறியதாக செய்தி வெளியானது.புதிய போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பழைய போப் இறந்த பிறகு புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான விரிவான நடைமுறையைக் கொண்டுள்ளது. ஒரு போப் இறந்தால் (அ) ராஜினாமா செய்தால், திருச்சபை “sede vacante” என்றழைக்கப்படும். புனித பேதுருவின் சிம்மாசனம் காலியாக இருக்கும்போது இது நிகழ்கிறது. இந்த காலம் பொதுவாக பல வாரங்கள் நீடிக்கும். மறைந்த போப்பின் உடல் வாடிகனில் உள்ளது. அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. இது ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான தனிப்பட்ட கூட்டம். விதிகளின்படி, செட் வகான்டே தொடங்கிய 15 முதல் 20 நாட்களுக்குள் மாநாடு தொடங்க வேண்டும்.