Connect with us

சினிமா

நெப்போலியனின் மகன் குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்..! மருத்துவரின் அதிரடிக் கருத்து..!

Published

on

Loading

நெப்போலியனின் மகன் குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்கள்..! மருத்துவரின் அதிரடிக் கருத்து..!

பிரபல நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நெப்போலியன் ஒரு நேர்மையான அரசியல் வாதியாகவும், பல கதாப்பாத்திரங்களால் தன்னை நிரூபித்த திரை நடிகராகவும் ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கின்றார். தற்பொழுது நெப்போலியனின் மகன் தனுஷ் பற்றிய புதிய சர்ச்சையான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியுள்ளன.அண்மையில் ஒரு தனியார் யூடியூப் சேனல், நெப்போலியனின் மகன் தனுஷின் உடல்நிலை மற்றும் குடும்ப விவகாரங்களை மையமாகக் கொண்டு தவறான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இவையெல்லாம் ஆதாரம் இல்லாத விடயம் என்றும், ஒருவரின் தனி வாழ்வை கெடுக்கக்கூடிய செயல் என்றும் மருத்துவர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது, “தனுஷ் தற்போது முழுமையாக சுகமுடன் இருக்கிறார். அவருக்கு எந்தவித உடல் சார்ந்த சிக்கலும் இல்லை. இவ்வாறு தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்றால், அது மருத்துவராக என்னுடைய நேர்மைக்கும் எதிரானதாகும். பொதுவாக ஒரு குடும்பத்தின் அமைதிக்கும் கேடு விளைவிக்கும். ஆகவே, இது போன்ற தவறான தகவல்களை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” எனவும் தெரிவித்திருந்தார். இந்தத் தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன