பொழுதுபோக்கு
பகலில் தூங்கி, இரவில் வேலை செய்யும் இசைப்புயல்; அதிகாலையில் தர்காவிற்கு செல்லும் ஏ.ஆர். ரஹ்மான்!

பகலில் தூங்கி, இரவில் வேலை செய்யும் இசைப்புயல்; அதிகாலையில் தர்காவிற்கு செல்லும் ஏ.ஆர். ரஹ்மான்!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது இரவு நேர வேலை அட்டவணைக்கு பிரபலமானவர். பகல் நேர பரபரப்பை விட இரவின் அமைதியில் தான் நன்றாக கவனம் செலுத்த முடியும் என்று அவர் அடிக்கடி கூறியுள்ளார். மஷாபிள் இந்தியாவுடனான சமீபத்திய உரையாடலில், இரவில் தூங்கி காலையில் எழும் ‘சாதாரண’ அட்டவணை தனக்கு ‘போரடிப்பதாகவும்’, அதற்கு மாறாகப் பின்பற்றுவதையே விரும்புவதாகவும் ரஹ்மான் வெளிப்படுத்தினார்.ஆங்கிலத்தில் படிக்க:மும்பையின் கடுமையான போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது குறித்து கேட்டபோது, அவர் பதிலளித்தார், “நான் பகலில் பயணம் செய்வதில்லை. நான் ஒரு இரவு நேரப் பறவை, ஏனென்றால், இரவில் போக்குவரத்து நெரிசல் இல்லை, நான் எங்கும் செல்ல முடியும். சில சமயங்களில் நான் அதிகாலையில் தர்காவிற்குச் சென்றுவிட்டு, போக்குவரத்து வருவதற்கு முன்பு சென்று தூங்கிவிடுவேன். தால் படத்தின் காலத்திலிருந்தே இதுதான் வழக்கமாக உள்ளது.” என்றார்.ஏ.ஆர். ரஹ்மான் மேலும் கூறுகையில், இரவில் தூங்கி காலையில் எழுவது தனக்கு சலிப்பாகவும் போரடிப்பதாகவும் இருக்கிறது. “நான் இப்போது இரவில்தான் தூங்குகிறேன். இரவில் தூங்கி காலையில் எழுவது மிகவும் போரடிக்கிறது, எனது வாழ்க்கை முறைக்கு, இது தவறான விஷயம் என்று நான் சொல்லவில்லை. பொதுவாக, நான் அதிகாலை 2:30 மணிக்கு எழுந்து காலை 7 மணிக்கு தூங்குகிறேன்.”அதே பேட்டியில், மறைந்த லதா மங்கேஷ்கரிடமிருந்து பயிற்சியின் முக்கியத்துவத்தை தான் எப்படி கற்றுக்கொண்டேன் என்பதையும் ஏ.ஆர். ரஹ்மான் பேசினார். அவர் கூறுகையில், “நாங்கள் 2006-ல் ஹைதராபாத்தில் லதா ஜி அறக்கட்டளையுடன் ஒரு கச்சேரி செய்தோம். கச்சேரிக்கு முன், யாரோ பயிற்சி செய்வதை நான் கேட்டேன். லதா ஜி உள்ளே ஒரு ஹார்மோனியத்துடன் பயிற்சி செய்து கொண்டிருந்தார். ‘அவர் ஏன் பயிற்சி செய்ய வேண்டும்? அவர் லதா மங்கேஷ்கர்’ என்று நான் நினைத்தேன். ‘ஓ, இப்படித்தான் மக்கள் காரியங்களைச் செய்கிறார்களா?’ என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். அப்போதுதான் நான் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். இப்போது நான் சுமார் 30-40 நிமிடங்கள் பயிற்சி செய்கிறேன்.” என்றார்.தால் படத்தின் இயக்குனர் சுபாஷ் கய், ரஹ்மான் எப்படி நள்ளிரவு வரை வேலை செய்கிறார் என்பதை நினைவு கூர்ந்தார். “ரஹ்மான் பொதுவாக இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரெக்கார்டிங் செய்வார். தால் படத்தின் இசையை உருவாக்க நாங்கள் 70 இரவுகளை செலவிட்டோம். கவிதா ஜி ரெக்கார்டிங்கிற்கு வந்தபோது எனக்கு நினைவிருக்கிறது. அவர் ஒரு அந்தராவும் ஒரு முக்தாவும் பாட வேண்டியிருந்தது. அதிகபட்சம் 45 நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்குள் அது முடிந்துவிடும் என்று நினைத்தோம். அங்குதான் ரஹ்மானின் நுட்பம் மற்றும் வேலை செய்யும் முறையைப் பற்றி நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். அவர் தொடர்ந்து ரெக்கார்டிங் செய்துகொண்டே அவரிடம் ‘நீங்கள் தொடருங்கள். இன்னும் ஒருமுறை’ என்றார். இறுதியில், ‘நீங்கள் சலிப்படையும் வரை தொடர்ந்து பாடுங்கள்’ என்று அவரிடம் கூறினார். அவர் ரிதத்தை திரும்பத்திரும்ப வாசித்தார், அவர் மணிக்கணக்கில் பாடிக்கொண்டிருந்தார்.” என்றார்.