இலங்கை
போப் மறைவுக்கு பின் உலக பேரழிவா? பகீர் கிளப்பும் கணிப்பு !

போப் மறைவுக்கு பின் உலக பேரழிவா? பகீர் கிளப்பும் கணிப்பு !
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் காலமானதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
பரிசுத்த போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை காலை காலமானார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ள நிலையில் , போப் இன் மறைவுக்கு உலக தலைவர்கள், மற்றும் மக்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கத்தோலிக தலைமை மதகுரு போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு என்று சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பே ‘நாஸ்ட்ரடாமஸ்’(Nostradamus) கணிப்பு இப்போது பேசுபொருளாகியுள்ளன.
‘நாஸ்ட்ரடாமஸ்’(Nostradamus) என்றழைக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த தத்துவ ஞானியும் ஜோதிடருமான மைக்கேல் டே நாஸ்ட்ரெடேம், தமது காலத்துக்குப்பின் இந்த உலகில் நடக்கப்போகும் போர்கள், அரசியல் மாற்றங்கள், இயற்கைப் பேரழிவுகள் எனப் பலவற்றை முன்பே கணித்துக் கூறியுள்ளார்.
அவற்றில் பெரும்பாலான விஷயங்கள் நடைபெறத் தவறவில்லை என்பதால் போப் குறித்து அவர் கணித்துக் கூறியுள்ள விஷயங்களும் ஒருவேளை நிஜமாகுமோ? என்கிற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.
அதேவேளை நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) போலவே அயர்லாந்தைச் சேர்ந்த ஆன்மிக ஞானி ‘மலாச்சி’ கணித்துக் கூறியுள்ள விஷயங்கள் சற்று அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன.
12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மலாச்சி கணித்துள்ள ஆரூடத்தின்படி, “புனித ரோமன் தேவாலயத்தில் இறுதிக்கட்டமாக, ‘பீட்டர்’ என்ற ரோமன் போப் ஆக அமருவார்.
அவர் தம்மைப் பின்பற்றுபவர்களை பல இன்னல்களிலிருந்து நல்மேய்ப்பராக கடந்து செல்ல உதவுவார்.
அதன்பின், ஏழு குன்றுகளின் நகரம் அழிவைச் சந்திக்கும். இதுவே முடிவு” என்பதே அவரது கணிப்பு.
இதனைச் சுட்டிக்காட்டும் சிலர், புதிய போப் அதிலும் குறிப்பாக, ‘பீட்டர்’ என்ற பெயருடையவர் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில், அது, உலக அழிவுக்குக் காரணமாக அமையலாம் என்கின்றனர்.
அதேவேளை ஹங்கேரியாவைச் சேர்ந்த ஐரோப்பாவின் ஆயர் பேரவைகளின் முன்னாள் தலைவராக உள்ள கார்டினல் பீட்டர் எர்டோ அடுத்த முன்னணி வேட்பளராக உள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏழாவது கார்டினல் ஆன ஆண்டானியோ டேகல் என்பவரும் இந்த பட்டியலில் உள்ளார், 67 வயதான இவர், போப் பெனடிக்ட் XVI ஆல் கார்டினலாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.