விளையாட்டு
மும்பைக்கு எதிரான தோல்வி: அடுத்த ஆண்டு இதுதான் ப்ளான்; எம்.எஸ்.தோனி பேச்சு

மும்பைக்கு எதிரான தோல்வி: அடுத்த ஆண்டு இதுதான் ப்ளான்; எம்.எஸ்.தோனி பேச்சு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன் சேர்ந்து இந்த தொடரில் 6-வது தோல்வியை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஅஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், அடுத்த சீசனில் சிறப்பான அணியை கட்டமைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.ஆங்கிலத்தில் படிக்க: IPL 2025: After Wankhede defeat, MS Dhoni turns focus to CSK XI for ‘strong comeback’ next year18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து அணிகளும் முதல் 7 ஆட்டங்களை முடித்துக்கொண்டு அடுத்த சுற்று ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. இதில் நேற்று வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 8-வது போட்டியில் ஆடிய சென்னை அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.இதன் மூலம் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி, மீதமுள்ள 6 போட்டிகளிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனிடையே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய கேப்டன் எம்.எஸ்.தோனி, நாங்கள் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதால், ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தை மட்டுமே எடுத்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.தொடர்ந்து, எதிர்காலத்திற்கான திட்டம் குறித்து பேசிய அவர், “நாம் ஒரு சிலரை இழந்தால், அடுத்த ஆண்டுக்கான சரியான கூட்டணியைப் பெறுவதற்கு எது முக்கியம் என்பது தெரியும். முடிவுகள் இருந்தபோதிலும், சிஎஸ்கே தங்கள் அணியைப் பற்றி அதிகம் கவலைப்பட விரும்பாது. அதிகமான வீரர்கள் மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, தகுதி பெற முயற்சிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இல்லையென்றால், அடுத்த ஆண்டுக்கு ஒரு பாதுகாப்பான 11 பேர் கொண்ட அணியை பெற்று வலுவாக திரும்பி வருவோம்.சிஎஸ்கே முதல் முறையாக ஏழாவது இடத்திற்கு சரிந்த 2020 சீசனை நினைவுகூர்ந்த தோனி, தோல்விகளின் குவியல் உணர்ச்சிபூர்வமான முடிவுகளுக்கு வழிவகுக்கக்கூடாது. நாம் நல்ல கிரிக்கெட் விளையாடினால் வெற்றி பெறுகிறோம் என்பதை நாம் உணர வேண்டும். அதே நேரத்தில், நாம் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்றால், அதைப் பற்றி அதிகமாக உணர்ச்சிவசப்படாமல் இருப்பது முக்கியம்அதே நேரத்தில், நீங்கள் நடைமுறைக்கு ஏற்றவராக இருக்க விரும்புகிறீர்கள். அந்த வகையில் சில சந்தர்ப்பங்கள் இருந்தன, அத்தகைய பருவங்களில் ஒன்று, 2020, அது எங்களுக்கு சிறப்பாக இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் நாம் சரியான கிரிக்கெட்டை விளையாடுகிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். நாம் நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்கிறோமா, பந்து வீச்சாளர்கள் சேமிக்க வேண்டிய ரன்களின் அளவை சரியாக வைக்க முயற்சிக்கிறோமா என்பதுதான் முக்கியம். எனவே, அவைதான் நமக்குக் கிடைத்துள்ள கேள்விக்குறிகள்” என்று தோனி கூறியுள்ளார்.