இலங்கை
1010 போதை மாத்திரைகளுடன் நுணாவிலில் இளைஞர் கைது!

1010 போதை மாத்திரைகளுடன் நுணாவிலில் இளைஞர் கைது!
சாவகச்சேரி, நுணாவிலில் 1010 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடையவர் என்றும், இவர் நீண்ட நாள்களாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த தகலுக்கு அமைய கண்காணிக்கப்பட்டுவந்த சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.