விளையாட்டு
KKR vs GT LIVE Score: ஆதிக்கம் செலுத்துமா குஜராத்? கொல்கத்தாவுடன் இன்று மோதல்

KKR vs GT LIVE Score: ஆதிக்கம் செலுத்துமா குஜராத்? கொல்கத்தாவுடன் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று திங்கள்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் 39-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆங்கிலத்தில் படிக்கவும்: KKR vs GT LIVE Cricket Score, IPL 2025நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 7 ஆட்டங்களில் 5ல் வெற்றியை ருசித்துள்ள குஜராத் 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முத்லிடத்தைப் பிடித்துள்ளது. மறுபுறம், 7 போட்டிகளில் 3-ல் வென்று 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது கொல்கத்தா. சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா முன்னேற முயலும்.அதேநேரத்தில், இந்தப் போட்டியிலும் வென்று தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த குஜராத் அணி நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேருக்கு நேர் ஐ.பி.எல்.லில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 4 போட்டிகளில் 2 போட்டிகளில் குஜராத் வென்றுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா 1 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.