Connect with us

இலங்கை

இலங்கையில் நீர்வழிப் போக்குவரத்து தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

Published

on

Loading

இலங்கையில் நீர்வழிப் போக்குவரத்து தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

அரச – தனியார் பங்குடமையின் கீழ் நீரோட்டங்களைப் பயன்படுத்தி சுற்றுலா மற்றும் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், நகர்ப்புற பிரயாணிகளின் போக்குவரத்துக்காகவும் நீர்மூலங்கள் மற்றும் நீரோட்டங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Advertisement

நாட்டின் கடலோரத்தையும் , உள்ளக ரீதியாக காணப்படும் நீரோட்டங்களையும் பயன்படுத்தி ஒரு சில பிரதேசங்களை உள்ளடக்கி படகுச் சேவைகளை ஆரம்பிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க புத்தளம் – கோட்டை, கோட்டை – காலி, காலி – மாத்தறை கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்கும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதன் மூலம் சுற்றுலாத்துறை மேம்பாடு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கான வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் ஹமில்டன் கால்வாய், பேர வாவி, தியவன்னா ஓயா மற்றும் மாது கங்கை போன்ற நீர் வளங்களைப் பயன்படுத்தி உள்ளக நீர்வழிப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன