இலங்கை
இளமை காலத்தில் போப் எழுதிய காதல் கடிதம் !

இளமை காலத்தில் போப் எழுதிய காதல் கடிதம் !
இளமை காலத்தில் பரிசுத்த பாப்பரசர் எழுதிய காதல் கடிதம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிராசின்ஸ் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக தனது 88 வயதில் நித்திய இளைப்பாறினார்.
அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த போப் பிராசின்ஸ் தென் அமெரிக்காவை நாடுகளில் இருந்து முதன்முதலில் போப் ஆண்டவரானது இவர்தான்.
கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் 266வது போப் ஆண்டவராக செயல்பட்டார்.
போப் பிராசின்ஸ் தனது 22 வயதில் இருந்து கிறிஸ்துவ சமூகத்திற்கான சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
போப் பிரான்சிஸின் இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ ஆகும். ஜார்ஜ் இறைவனுக்கு தன்னை அர்ப்பணிப்பதற்கு முன்பு, தனது 12 வயதில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் வசித்து வந்தார்.
அப்போது, ஜார்ஜ் அவரது பக்கத்துவீட்டு பெண்ணான அமாலியா டாமோன்ட் என்ற பெண்ணை காதலித்து, அவருக்கு காதல் கடிதமும் எழுதியுள்ளார்.
சிறுவயதில் அந்த பெண்ணுடனான நட்பு அவருக்கு ஆழமான காதலாக வளர்ந்திருக்கிறது.
உடனே அந்த பெண்ணிடம் சென்று காதலை வெளிப்படுத்தியது மட்டுமின்றி திருமணம் செய்யும் விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஜார்ஜ், போப் ஆண்டவராக பொறுப்பேற்ற பின்னர் அவரது அமாலியா டாமோன்ட் என்ற அந்த பெண்மணி அந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்து நேர்காணல் அளித்திருந்தார்.
அதில் அவர்,”ஜார்ஜ் என்னிடம்,’நீ என்னை திருமணம் செய்ய ஒப்புகொள்ளாவிட்டால், நான் பாதிரியராகி விடுவேன்’ என சொன்னான்.
அவன் அப்போது பெரியவனாக, முதிர்ச்சி பெற்றவனாக, அற்புதமான பையனாக இருந்தான். நாங்கள் நடைபாதைகளிலும் பூங்காக்களிலும் நடனமாடினோம், விளையாடினோம். அது மிகவும் அழகான நேரம். நாங்கள் இருவரும் பணிவாகவும் ஏழைகளை பற்றி அக்கறையுடனும் இருந்தோம்” என்றார்.
ஆனால், அந்த அமாலியாவின் வீட்டில் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணை கண்டித்த அவரது தந்தை,’எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஆணுக்கு நீ கடிதம் எழுதுவாய்’ என்று கூறி அடித்துள்ளார்.
அதன்பின் அமாலியா – ஜார்ஜ் இருவரும் பல மாதங்களுக்கு சந்திக்கவே இல்லையாம். இறுதியில் ஜார்ஜ் பாதிரியாகும் நிகழ்வில்தான் அமாலியா அவரை பார்த்தாராம்.
இவரின் பாதையும் வெகு தொலைவில் சென்றவிட்ட பின்னரும், ஜார்ஜ் – அமாலியா இடையே ஒரு நட்பான, மரியாதையான உறவு நீடித்துள்ளது.
இருவருக்கும் பல ஆண்டுகளாக கடித போக்குவரத்தும் இருந்திருக்கிறது. நல்ல வேளை அன்று நான் அவனுக்கு ஓகே சொல்லவில்லை என்றும் அமாலியா ஒருமுறை ஜோக் அடித்த சம்பவமும் உள்ளதாம்.