இலங்கை
எரிவாயுக் கசிவால் உயிரிழந்த கிளிநொச்சிப் பெண்

எரிவாயுக் கசிவால் உயிரிழந்த கிளிநொச்சிப் பெண்
எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். கிளிநொச்சி மருதநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்றுமுன்தினம் மாலை சமையல் செய்துகொண்டிருந்தபோது, எரிவாயுக் கசிவு ஏற்பட்டு அவருடைய ஆடையில் தீ பற்றியுள்ளது. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.