Connect with us

பொழுதுபோக்கு

கூலி படம் ரிலீஸ்; லோகேஷ் கனகராஜின் திடீர் முடிவு; இனி சோஷியல் மீடியாவுக்கு ரெஸ்ட்

Published

on

Rajanivn

Loading

கூலி படம் ரிலீஸ்; லோகேஷ் கனகராஜின் திடீர் முடிவு; இனி சோஷியல் மீடியாவுக்கு ரெஸ்ட்

ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், இந்த படம் தொடர்பான ப்ரமோஷன் மற்றும் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும்வரை சமூகவலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். மாநகரம், கைதி மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.பல வருட இடைவெளிக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில், கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் ஷாஹிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது.கூலி படம் வரும் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர், படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, படம் வெளியாக இன்னும் 3 மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் மற்றும் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும்வரை, சமூகவலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.Hey guys!I’m taking a small break from all the social media platforms until #Coolie’s promotions With Love,Lokesh Kanagaraj 🤜🏼🤛🏼இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நண்பர்களே, கூலியின் வித் லவ் விளம்பரங்கள் வரை எல்லா சமூகவலைதளங்களில் இருந்தும் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன