Connect with us

இலங்கை

கைமாறும் விஜய் டிவி; தொகுப்பாளர்கள் வெளியேற்றம்? ரசிகர்கள் க்ஷாக்!

Published

on

Loading

கைமாறும் விஜய் டிவி; தொகுப்பாளர்கள் வெளியேற்றம்? ரசிகர்கள் க்ஷாக்!

  சின்னத்திரை டாப் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ள விஜய் டிவி கூடிய விரைவில் கலர்ஸ் நிறுவனத்திற்கு கைமாற இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதுமட்டுமல்லாது விஜய் டிவின் பிரபல மக்கள் மனங்களை கவர்ந்த தொகுப்பாளர்கள் கோபிநாத் மற்றும், பிரியங்கா, போன்றவர்களும் நீக்கப்பட இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நல்ல லாபத்திற்கு விஜய் டிவி விற்கப்பட்டு இருப்பதாக கூற நிலையில், கலர்ஸ் நிறுவனம் சில அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறதாம். இதில், இதுவரை விஜய் டிவியில் நடந்து வந்த பழமையான நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்தப்போகிறார்களாம்.

முன்னதாக ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்து, ஜியோ ஹாட்ஸ்டாராக தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. ஜியோவுடன் ஏற்கனவே கலர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் விஜய் தொலைக்காட்சியின் லோகோவும் மாற்றப்படும் என தகவல் தெரிவிக்கின்றனர். அதற்கு பதிலாக புத்தம் புது பொலிவுடன் புதிய நிகழ்ச்சிகளை துவங்கப்போவதாக கூறுகின்றனர்.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கரியரை ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.

அவரை போன்றே ரோபோ சங்கர், புகழ், திவ்யதர்ஷினி போன்ற பலரும் விஜய் தொலைக்காட்சியின் மூலம் தங்களது திறமையால் வளர்ந்து தமிழ் சினிமாவில் முத்திரை பத்தித்துள்ளனர்

இந்நிலையில் மக்களால் ரசிக்கப்பட்டு வரும் விஜய் டிவி இது பெரும் சோதனை காலம் என்றே கூறவேண்டும்.மேலும் இந்த தகவல் விஜய் டிவி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.   

Advertisement

 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன