இலங்கை
சி.ஐ.டி. விசாரணை வளையத்துக்குள் மைத்திரிபால

சி.ஐ.டி. விசாரணை வளையத்துக்குள் மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று நீண்டநேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியைத் தவறாகக் கையாண்டார், அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நன்மைகருதி நிதியை வழங்கினார் உள்ளிட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்கள் மைத்திரி மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காகவே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதே விடயங்களுக்காக சில நாள்களுக்கு முன்னரும் மைத்திரிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.